ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆதரவு

Share

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், திமுக கூட்டணி கட்சிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க மாநில தலைவர் சேம.நாராயணன் எழுதியுள்ள கடிதம்: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக கூட்டணி கட்சிக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கம் முழு ஆதரவை அளிக்கும். மேலும், இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கம் சார்பாக தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறோம். தங்களது தலைமையில், கடந்த 20 மாத கால நல்லாட்சியில் தமிழக மக்களுக்கு நீங்கள் ஆற்றிய பணிகளையும், தொழிலாளர்கள் பெற்ற நலத்திட்ட உதவிகளையும், வேலைவாய்ப்புகளையும் மக்களிடம் எடுத்து கூறியும், மதச்சார்பற்ற கொள்கை உடைய நல்லாட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com