`இ-சேவை மையத்தில் 600 சேவைகள்’ – அமைச்சர் அறிவிப்பு!

Share

சட்டமன்ற கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய இ- சேவை மையம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “ தமிழகம் முழுவதும் 235 அரசு சேவை மையம் மற்றும் 9720 பிற சேவை மையங்கள் மூலமாகவும் மக்களுக்குத் தேவையான அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இ- சேவை மையம்

இதுதவிர, தமிழகத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து கிராமப்பகுதிகளில் இருந்து விண்ணப்பிக்கும் தகுதியானவர்களின் மனுக்களை பரிசீலித்து இ-சேவை மையங்கள் தொடங்க அனுமதியளிக்கப்படவுள்ளது.

மேலும் அவர்கள் இ – சேவை மையம் தொடர்பான பயிற்சி வழங்க கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு தனியாக பயிற்சியும் வழங்கபடும். ஆனால் இ- சேவை மையங்களில் சேவைகள் இலவசமாக வழங்குவது சாத்திமில்லை, அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நேரம் மட்டுமே தவிர்க்கப்படும். தற்போது இந்த சேவை மையங்களில் 235 சேவைகள் வழங்கப்படுகிறது. விரைவில் பணம் செலுத்துதல் உள்ளிட்ட 600 சேவைகள் வழங்கப்பட உள்ளன.

இ-சேவை மையம்

இ-சேவை மையத்தில் பணியாளர்களை அரசுநியமிக்க முடியாது. அதே நேரத்தில், பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தொகை அதாவது ரூ.100-க்கான சேவையில் ரூ.70 தரப்படும். சான்றிதழ்கள் பெறுவது தொடர்பாக ஒளிவுமறைவற்ற தன்மையில் சேவை வழங்கப்படுகிறது. நீண்ட நிலுவை இருந்தால், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தரப்படுகிறது. விரைவில் இ-சேவை 2.0 திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com