இஸ்ரேல் காஸா: ஹமாஸின் புதிய எச்சரிக்கை- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மன்னிப்பு கோரியது ஏன்?

Share

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

”போர் நிறுத்தம் எட்டப்படாத பட்சத்தில் இன்னும் பலர் சடலங்களாகவே திரும்புவார்கள்’’ என ஹமாஸ் எச்சரித்திருக்கும் நிலையில், சனிக்கிழமை அன்று காஸாவில் சடலமாக மீட்கப்பட்ட 6 பணயக் கைதிகளை மீட்கத் தவறியதற்காக இஸ்ரேல் மக்களிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.

அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி மீட்பதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி இஸ்ரேலில் போராட்டங்கள் இரண்டாம் நாளாக தொடரும் நிலையில், நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்

இந்த நிலையில் சர்வதேச சட்டத்தை மீறும் ஆபத்து இருப்பதாக கூறி, இஸ்ரேலுக்கு சில ஆயுதங்களின் விற்பனையை பிரிட்டன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அடுத்தடுத்த நிகழ்வுகளால் இஸ்ரேல் அரசு மீது சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com