சென்னையில் இலவச மருத்துவ முகாம்!
சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனியில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் பார்க்கின்சன் (நடுக்குவாதம்) நோய்க்கான இலவச மருத்துவ முகாம் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த இலவச மருத்துவ முகாமில், காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள் பங்கேற்று மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள். உடலில் நடுக்கம், உடல் உறுப்புகளில் விறைப்புத்தன்மை, கைகள், விரல்கள், கால்களில் வேகக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் காவேரி மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாமிற்கு வரலாம்.
உடனே 044 – 4000 6000 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனியில் இருக்கும் காவேரி மருத்துவமனைகளில் நடக்கும் பார்க்கின்சன்ஸ் நோய்க்கான இலவச மருத்துவ முகாமில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.