`இளம் வயதினர் மாரடைப்பால் இறப்பது வருத்தமளிக்கிறது' கனிமொழி எம்.பி உருக்கம்!

Share

மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இளம் வயதினரும், சிறுவர்களுமே மாரடைப்பால் இறப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எதிர்பாராத நேரத்தில் திடீரென நிகழும் இழப்பை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

மாரடைப்பு

குஜராத்தின் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அதிகாலை ஐந்தரை மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். சிறுவனின் அம்மா சென்று பார்க்கையில், மூச்சற்று இருந்துள்ளார். பதறிப்போன பெற்றோர், உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர்; அங்கு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல ராஜ்கோட்டில், 23 வயதான நிமித் சத்ரானி மௌவா, திங்கட்கிழமையன்று சாலையில் உள்ள பார்மசி அருகே நெஞ்சு வலியால் சரிந்து விழுந்தார். ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்ததாக அறிவித்தனர். 

அங்கொன்றும் இங்கொன்றுமாக மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சிறுவனின் இறப்பினை குறித்து அறிந்த எம்.பி கனிமொழி, தனது X தளத்தில், “சமீப காலமாக மாரடைப்பால் சிறுவர்களும், இளம்வயதினரும் இறப்பதை அறியும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

கோவிட் 19 கொரோனா வைரஸ்

அதிகரித்து வரும் இதயப் பிரச்னைகள் மற்றும் கொரோனா தொற்றின் நீண்டகால தாக்கம் குறித்து ஆய்வை மேற்கொள்ள, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com