இலங்கை: ராஜபக்ஸ குடும்பத்தை மக்கள் அரசியலில் இருந்து புறக்கணித்து விட்டார்களா? அடுத்து என்ன?

Share

இலங்கை, ராஜபக்ஸ

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ், இலங்கை

நடந்து முடிந்த இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது.

இனி ராஜபக்ஸக்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

நான்கு ஆண்டுகளில் தலைகீழாக மாறிய இலங்கையின் அரசியல்

2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது மக்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தார்கள். 2015ல் நடந்த தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியாக்கப்பட்ட மைத்திரி பால சிறிசேன, இவர்களது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கவில்லை.

மேலும், 2019 ஏப்ரலில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புகளும் மக்களிடம் பெரும் அதிருப்தியையும் அச்சத்தையும் உருவாக்கியிருந்தன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com