இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு

Share

கூடாரம் எரிப்பு
படக்குறிப்பு,

காலிமுகத் திடல் போராட்டக் காரர்களின் கூடாரம் எரிப்பு.

இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கொழும்பு நகரில் முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறகு நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது.

போராட்டத் திடலில் ஒரு கூடாரம் தீவைப்பில் எரிவதைப் பார்க்க முடிந்தது.

போராட்டக் காரர்கள், அவர்களைத் தாக்கும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என இரு தரப்பினர் மீதும் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com