இலங்கை நீதிமன்ற ஆடை விதிமுறைகள்- முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் ஹபாயா அணிய முடியாத நிலை

Share

file image

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

இலங்கை நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிந்து ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஹபாயா என்பது உடல் முழுவதும் மறையும் வண்ணம் அணியப்படும் ஒரு நீண்ட அங்கி.

நீதிமன்றில் சட்டத்தரணிகள் அணிய வேண்டிய ஆடை விதிமுறைகள் தொடர்பில் – உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று சட்டமாணி ராஸி முகம்மத் கூறுகின்றார்.

கடந்த மார்ச் 30ஆம் தேதி, ‘உச்ச நீதிமன்ற விதிகள்’ எனும் தலைப்பில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மூவரின் ஒப்புதலுடன் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com