இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தமிழர் பகுதிகளில் வரலாற்றில் முதல் முறையாக தேசியக் கட்சி முன்னிலை – எப்படி?

Share

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை – சமீபத்திய நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி பாரிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்று (நவம்பர் 14), இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமார முன்னிலை, ரணில், சஜித் பாரிய பின்னடைவு – நேரலை
  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,863,186 (137 ஆசனங்கள்)
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,968,716 (35 ஆசனங்கள்)
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 500,835 (3 ஆசனங்கள்)
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 350,429 (2 ஆசனங்கள்)
  • இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 257,813 (6 ஆசனங்கள்)
  • சர்வஜன அதிகாரம் (SB) – 178,006 – (0 ஆசனம்)
  • ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) – 83,488 (0 ஆசனம்)
  • வேறு கட்சிகள் – 945,533 (6 ஆசனங்கள்)
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொகுதி ரீதியாக முதலில் அறிவிக்கப்படும் தேர்தல் முடிவுகள், பின்னர் மாவட்ட ரீதியாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (நவம்பர் 15), மொத்த முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com