இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம் என்ன?

Share

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: இன்று வாக்குப் பதிவு - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 14) நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

பிற்பகல் 1 மணி நிலரவப்படி, யாழ்ப்பாணத்தில் 36%, நுவரெலியாவில் 55%, கண்டியில் 36%, இரத்தினபுரியில் 50%, பதுளையில் 50%, கேகாலையில் 48%, திகாமடுல்லையில் 38%, மொனராகலையில் 44%, மாத்தறையில் 46%, முல்லைத்தீவில் 42%, கிளிநொச்சியில் 41%, குருநாகலில் 30%, மாத்தளையில் 46% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே, செப்டம்பர் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக, நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com