இலங்கை ஜனாதிபதி தேர்தல்: மீனவ மக்களின் வாக்குகளை பெற தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்கிறதா இலங்கை அரசு?

Share

இலங்கை அதிபர் தேர்தல் 2024: முக்கிய விவகாரமாக உருமாறும் மீனவர்கள் பிரச்னை

தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜூன் 18 முதல் செப்டம்பர் 4 -ஆம் தேதி வரை மீன்பிடிக்க சென்ற சென்ற மீனவர்களில்,167 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இலங்கை மீனவர்கள் வாக்குகளை பெறுவதற்காக திட்டமிட்டு கைது நடவடிக்கையை இலங்கை அரசு அதிகரித்துள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் இதனை மறுத்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழக மீனவர் உயிரிழப்பு

இலங்கையில் வரும் 21-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி சார்பில் சஜித் பிரேமதாச, அனுரா குமார திசநாயக்க ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com