இலங்கை ஜனாதிபதி அதிகாரத்தை குறைக்கும் 22ஆவது திருத்தச் சட்டம் – முழு விவரம்

Share

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக

இலங்கை நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 21 மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்தன. எதிராக ஒரு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றைக் குறைத்து, அவற்றினை நாடாளுமன்றம் மற்றும் அரசியல் பேரவை போன்றவற்றுக்குக் கையளிக்கும் வகையில் இந்தத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றின் தவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளமையை வலியுறுத்தினார்.

“சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின்றி பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது எனும் நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். எமக்குக் கிடைத்த தகவலின் படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, ஜிஎஸ்பி வரிச் சலுகை போன்றவை இலங்கைக்கு கிடைப்பது, 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியுள்ளது என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்” என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com