இலங்கை: அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி – முந்துவது யார்? வாக்கு எண்ணிக்கை நிலவரம் – நேரலை

Share

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார திஸநாயகே முன்னணியில் இருக்கிறார்.

தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரகுமார திஸநாயகே தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விறுவிறுப்பாக வாக்குப்பதிவு

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகள் உள்பட இலங்கை முழுவதுமே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

1.7 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com