ஜார்ஜியாவில் “ஃபிடே மகளிர் உலகக் கோப்பை’ செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையும் சர்வதேச கிராண்ட் மாஸ்டருமான 19 வயதான திவ்யா தேஷ்முக் முன்னாள், உலக சாம்பியனும் சீன வீராங்கனையுமான டேனை எதிர்கொண்டார். முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியின் 101-வது நகர்த்தலில் திவ்யா தேஷ்முக் வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார்.
இதன் மூலம் உலகக் கோப்பை செஸ் தொடரில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை கோனேரு ஹம்பி சீனாவின் லெய் டிங்ஜீயுடன் மோதினர். இரண்டு போட்டிகளின் முடிவில் ஸ்கோர் 1.0 – 1.0 என சமநிலையில் இருந்தது.