ஹைமன் எனப்படும் கன்னித்திரை கிழிவதற்கு செக்ஸ் மட்டுமல்லாமல், விளையாட்டு, நீச்சல், பைக்கில் இருபக்கம் கால் போட்டு உட்காருதல், டான்ஸ் ஆடுதல், ஓடிப்போய் பேருந்தில் ஏறுதல் என பல காரணங்கள் இருக்கின்றன. சில பெண்களுக்கு கன்னித்திரை மெல்லியதாக இருக்கும். அதனால், அது இயல்பாகவே கிழிந்துவிடும். சில பெண்களுக்கு கன்னித்திரை தடிமனாக இருக்கும். பாலியல் வன்கொடுமை நடந்தாலும் கிழியாது. பாலியல் தொழிலாளர்கள் சிலருக்குக்கூட ஹைமன் கிழியாமல் இருக்கும்.
வெஜைனல் டெலிவரி மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு பெண்ணுறுப்பின் பாதை விரிந்துதான் இருக்கும். இவர்களுக்கு இருவிரல் பரிசோதனை செய்வதன் மூலம், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதை எப்படிக் கண்டறிய முடியும்? மருத்துவ ஆராய்ச்சிகள் முன்னேறாத காலத்தில் மருத்துவ புத்தகத்தில் இருந்த இந்த வழிமுறைகளை, உடனடியாக மருத்துவப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும். டாக்டர்கள் இரு விரல் பரிசோதனை செய்தார்கள் என்றால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர்களுக்கு உடனடியாக தண்டனையும் வழங்க வேண்டும்” என்றார் டாக்டர் நாராயண ரெட்டி.