இரான் போருக்கு நடுவே வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுவது என்ன?

Share

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், புலம்பெயர் தொழிலாளர்கள், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

சைரன்கள் ஒலிக்கும்போது நார்மா டாக்டகான் செய்யக்கூடியது பிரார்த்தனை செய்வது மட்டும்தான்.

மத்திய கிழக்கில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரியும் 49 வயதான அவர், தனது கணவரும் மூன்று குழந்தைகளும் வசிக்கும் பிலிப்பைன்சில் உள்ள தனது வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ளார்.

கத்தாரில் மாட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு, தன் குடும்பத்தினரிடம்—தன் வீட்டுக்கு திரும்புவதே ஒரே நம்பிக்கையாக உள்ளது.

“வானில் பறக்கும் ஏவுகணைகளின் படங்களையும் காணொளிகளையும் பார்க்கும்போதெல்லாம், எனக்குப் பயமும் பதற்றமும் ஏற்படுகிறது,” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

“என் குடும்பத்தாருக்குத் துணையாக இருக்க, நான் உயிருடன் இருக்க வேண்டியது அவசியம். அவர்களுக்குத் துணையாக இருப்பது நான் மட்டுமே.”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com