இரான் தாக்குதல்: கோபத்தில் உள்ள வளைகுடா நாடுகள் போரில் இறங்குமா?

Share

துபையின் ஜெபல் அலி துறைமுகத்தில் உள்ள கப்பல் தளங்கள், இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் இடிபாடுகள் காரணமாகத் தீப்பிடித்தன

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, துபையின் ஜெபல் அலி துறைமுகத்தில் உள்ள கப்பல் தளங்கள், இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் இடிபாடுகள் காரணமாகத் தீப்பிடித்தன

வளைகுடா நாடுகள் இப்போது மத்திய கிழக்கின் சமீபத்திய போரில் முன்னணியில் உள்ளன. இதனால் அவை கோபமடைந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு இரான் அருகிலுள்ள அரபு நாடுகள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி பதிலடி கொடுத்துள்ளது. அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மட்டுமின்றி, பொதுமக்கள் பகுதிகள், முக்கியமான எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் இலக்காகக் கொண்டு தாக்கியுள்ளது.

இதன்மூலம், பயணம், சுற்றுலா, வணிகம் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பான, வளமான பகுதி என்ற வளைகுடா பிராந்தியத்தின் நற்பெயரை இரான் சேதப்படுத்துகிறது. இது இந்த நாடுகளுக்கு மிகவும் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறையையும் கடுமையாகப் பாதிக்கிறது.

இது அரபு அரசாங்கங்கள் விரும்பிய போர் இல்லை. அவர்கள் அதைத் தடுக்க முயன்றனர். இந்நிலையில், இரானின் இந்தத் தாக்குதல்களின் விளைவாக அவர்களும் மத்திய கிழக்கு மோதலுக்குள் மேலும் ஆழமாக இழுக்கப்படுவார்களா என்பதே இப்போது இருக்கும் முக்கியமான கேள்வி.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி, “அனைத்து வரம்புகளும் ஏற்கெனவே மீறப்பட்டுவிட்டதாக” கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com