இரான் – அமெரிக்கா பேச்சுக்கு நடுவே பாகிஸ்தான் ராணுவக் குழு சௌதி சென்றது ஏன்?

Share

பாகிஸ்தான், சௌதி அரேபியா

பட மூலாதாரம், GOP

படக்குறிப்பு, கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா ‘கூட்டு உத்தி சார் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டது.

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பாகிஸ்தானில் இருந்து ஒரு ராணுவக் குழு சௌதி அரேபியாவின் கிங் அப்துல் அஜீஸ் விமானப்படை தளத்திற்கு வந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை சௌதி பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, “இந்தப் பயணம், இரண்டு சகோதரத்துவ நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான கூட்டு உத்திசார் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்றுள்ளது.”

மேலும் அந்த அறிக்கையில், “பாகிஸ்தான் குழுவில் அந்நாட்டு விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் உதவி விமானங்கள் இடம்பெற்றுள்ளன. இது இரு நாடுகளின் பாதுகாப்பு படைகள் இடையே கூட்டு ராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. செயல்பாட்டு தயார்நிலையின் தரத்தை உயர்த்தி பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க பங்களிக்கிறது.”

2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா ‘கூட்டு உத்திசார் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன. அதன் கீழ் இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல் இரண்டு நாடுகளுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும்.

இரு நாடுகளின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com