இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்?

Share

இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, அரபு முஸ்லிம் நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானப்படைத் தளம்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின, இதை ஈரானுக்கு எதிரான “பெரிய இராணுவ நடவடிக்கை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார்.

தாக்குதல்களின் போது, ​​இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அலுவலகமும் குறிவைக்கப்பட்டது. அதில், காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர் இரானிய அரசு ஊடகமும் அதனை உறுதிப்படுத்தியது.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளது.

“பஹ்ரைனில் உள்ள ஒரு அமெரிக்க கடற்படைத் தளம் தாக்கப்பட்டுள்ளது. இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரான் பிராந்தியம் முழுவதும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது” என்று இரானிய இராணுவம், கூறியது.

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில், “அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘உண்மையான வாக்குறுதி 4’ நடவடிக்கையின் கீழ் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளை குறிவைக்கிறோம்” என்று கூறியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com