இரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு பற்றிய முழு விவரம் – 5 கேள்விகளும் பதில்களும்

Share

இரான், இஸ்ரேல், அமெரிக்கா, உலகச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், Reuters

இரான் – இஸ்ரேல் இடையே நீடிக்கும் மோதல் அமெரிக்க ராணுவ நடவடிக்கை காரணமாக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவம் இரானின் மூன்று அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளதாக கூறியுள்ளார். இதுவே அந்த முக்கியக் கட்டம்.

“இரானில் மேலும் பல இலக்குகள் இன்னும் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரவு அவர்களுக்கு மிகவும் கடினமானதாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் இருந்திருக்கலாம்,” என்று அமெரிக்க மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக தகவலை தெரிவித்த டிரம்ப் இதைக் குறிப்பிட்டார்.

“இரான் சமாதானத்திற்கு வரவில்லையெனில், மீதம் இருக்கும் அந்த இலக்குகளை துல்லியமாக, வேகமாக, திறனோடு அழிக்க நாம் செல்வோம்,” என்றும் அவர் கூறினார்.

ஃபோர்டோ அமெரிக்கா குறிவைத்த இலக்குகளில் முக்கியமான ஒன்று. யுரேனியம் செறிவூட்டும் மையமான அது மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. இரானின் அணு ஆயுத கனவுகளுக்கான முக்கிய தளமாக அது இருந்தது. ஆனால் தாக்குதலுக்கு உள்ளான தளங்களில் ஏற்பட்டுள்ள சேதத்தின் தன்மை குறித்து நமக்கு தெரியவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com