இரவு முழுவதும் தானியம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தலாமா?

Share

பருப்பு வகைகள், தானிய வகைகள், நட்ஸ் போன்ற பல உணவுப் பொருட்களை நாம் இரவு முழுவதும் அல்லது 7, 8 மணி நேரம் ஊற வைத்த பிறகு சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். சாதாரணமாக இவற்றை ஊற வைத்தால் மட்டுமே நன்றாக வெந்து வரும் என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், அதை தாண்டி எதற்காக ஊற வைக்கிறோம், அதனால் கிடைக்கும் வேறு பலன்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. தானியங்கள், பருப்புகள் போன்றவற்றை நன்றாக ஊற வைத்து அல்லது முளைவிட்ட பிறகு சமைத்தால் மட்டுமே அவை ஜீரணம் ஆகும். நட்ஸ், பருப்பு, தானியம் போன்றவற்றில் இயல்பாகவே ஃபைடிக் அமிலம் என்பது இருக்கும். ஊற வைக்காமல் இவற்றை சமைத்து சாப்பிடும் பட்சத்தில், இந்த ஃபைடிக் அமிலமானது நமது உணவுக்குடல் பாதையில் உள்ள மினரல்களுடன் பிணைந்து செரிமானப் பிரச்னையை ஏற்படுத்தும்.

நம் குடலானது மினரல்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையை இதனால் இழக்க நேரிடும். இறுதியாக உடலுக்கு மினரல் பற்றாக்குறை ஏற்படும். தண்ணீரில் ஊற வைப்பதன் மூலமாக இந்த ஃபைடிக் அமிலமானது செரிமானத்திற்கு உகந்த வகையில் உடைக்கப்படுகிறது. அதே சமயம், பருப்பு, தானியங்களை ஊற வைத்த தண்ணீரை நாம் பெரும்பாலும் கீழே ஊற்றி விடுகிறோம்.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து என்ன?

ஊட்டச்சத்து நிபுணர் ஜூஹி கபூர் இதுகுறித்து கூறுகையில், “ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்றுவது நல்ல பழக்கம் கிடையாது. ஊற வைத்த தண்ணீரில் 8 வகையான விட்டமின்கள் இருக்கும். அதை கீழே ஊற்றும்போது அதனுடன் இந்த சத்துக்களும் வீணாகிவிடும். ஊறவைத்த தண்ணீரில் ஊட்டச்சத்துக்கு எதிரான பண்புகள் இருப்பதாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், இது முற்றிலும் தவறானதாகும்’’ என்று தெரிவித்தார்.

ஊட்டச்சத்து அறிவியலின்படி தானியங்கள், பருப்பு ஊற வைத்த தண்ணீரை நாம் தொடர்ந்து சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பருப்புகளில் உள்ள ஃபைடேட்ஸ் என்னும் சத்து ஊற வைத்த தண்ணீருடன் அடித்துச் செல்லப்படாது. அதே சமயம், தண்ணீரில் கரையக் கூடிய விட்டமின் பி போன்ற சத்துக்கள் ஊற வைத்த தண்ணீருடன் அடித்துச் செல்லப்படும்.

Also Read | இந்த இமயமலை பூண்டு பற்றி கேள்விப்பட்டதுண்டா..? நன்மைகள் தெரிஞ்சா விடவே மாட்டீங்க..!

கவனிக்க வேண்டியவை :

  • தானியங்கள், பருப்புகளை ஊற வைக்கும் முன்பாக நன்றாக அலசிக் கொள்ளவும்.
  • தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை குறைந்தபட்சம் 2 முதல் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • முழு தானியங்கள் என்றால் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்றிவிட வேண்டாம். அதை சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com