சாம்பார், புளிக்குழம்பு என சாப்பிட்டு அலுத்து போனாலும் சரி, தயிர் சாதமே சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, சமைக்க நீண்ட நேரம் இல்லையென்றாலும் சரி. அனைவரும் சட்டென செய்ய நினைப்பது ரசம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பகூடிய இந்த டிஷ்ஷை செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்காது எனினும் காலை வேளையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இன்னும் சீக்கிரம் உங்களால் ரசம் வைக்க முடியும் என்றால் நன்றாகத்தானே இருக்கும். அதற்கு தான் இந்த ரசப்பொடி. இந்த ரசப்பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் ஐந்தே நிமிடத்தில் வைக்கும் ரசத்தை வெறும் இரண்டே நிமிடங்களில் வைத்து விடலாம்.
இந்த ரசத்தை வைத்து ஒரு உருளைக்கிழங்கு அல்லது ஒரு முட்டையை வறுத்து சைடிஷாக எடுத்துக் கொண்டால் போதும். ஏன் ஒரு அப்பளம் இருந்தால் கூட போதும். சுவையான லன்ச் ரெடி. வார இறுதி நாட்களில் நேரம் கிடைக்கும் பொழுது இந்த ரசப்பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் போதும் ஒரு மாதம் வரை வைத்து அவ்வபோது பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது ரசப்பொடியை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- தனியா – 4 கப்
- துவரம்பருப்பு,சீரகம்,மிளகு – தலா ஒரு கப்
- காய்ந்த மிளகாய் – 10

செய்முறை:
வெறும் வாணலியில் தனியா, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும். அவ்வளவு தான் ரசப்பொடி ரெடி.
Also Read | மாவு கூட அரைக்க தேவையில்லை.. சுவையான கேரட் பணியாரம் செய்ய ஈஸியான ரெசிபி இதோ.!
குறிப்பு:
- புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்புசேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப்போட்டு, கொதிக்கவிட்டால் போதும் ரசம் ரெடி.
- அதில் சிறிதளவு நெய்யில் கடுகுதாளித்து, பெருங் காயத்தூள்சேர்த்தால்… ரசத்தின் மணம், ருசி ஆளை அசத்தும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.