இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் – வியூகம் என்ன?

Share

விஜய், தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், tvk hq

2026 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

திமுகவின் இரண்டு வலுவான தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதன் மூலம் அத்தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அறிமுகம் செய்துவைத்தார் விஜய். அப்போது, தான் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது அவரது “நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக” கூறுகிறது திமுக.

ஆனால் விஜயின் இந்த முடிவு “வியூக அடிப்படையிலானது” என த.வெ.க. விளக்கம் அளிக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com