இம்ரான் கான்: கைது நடவடிக்கையால் முடங்கிய கேப்டனின் அரசியல் பயணம்

Share

  • ஆரிஃப் ஷமீம்
  • பிபிசி உருது

இம்ரான் கான் - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் புகார் தொடர்பாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது வேறொரு வழக்கில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை (மே 9) கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை பாகிஸ்தான் ஆயுதப்படை ரேஞ்சர்கள் இழுத்துச் சென்றபோது, “இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்” என்று இம்ரான் கான் தெரிவித்தார். அவரை குண்டு துளைக்காத கவச வாகனத்தில் ஏற்றி போலீஸ் ரேஞ்சர்கள் பெயர் குறிப்பிடாத இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

2022ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், அன்றிலிருந்து முன்கூட்டியே தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதாகக் கூறி பல்வேறு பொதுக்கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பரில் அவர் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி நடத்தியபோது நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com