இமாச்சலில் 62 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது பாஜ: பல எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை

Share

புதுடெல்லி: இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்காக முதல்கட்டமாக 62 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இச்சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரியில் முடிவடைய உள்ளது. இதனால், இங்கு அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடி, மூத்த தலைவர்கள் கொண்ட பாஜ.வின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம்  நடந்தது. அப்போது முதல் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் சிராஜ் தொகுதியிலும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுக்ராமின் மகன் அனில் சர்மா மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 5 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது எம்எல்ஏ.வாக இருக்கும் பலருக்கு இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com