தஞ்சாவூர்: இபிஎஸ் கையில் இரட்டை இலை இருக்கும் வரை கட்சிக்கு சரிவுதான் ஏற்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: கடந்த 2017ம் ஆண்டு தர்மயுத்தம் நடத்தியது தவறு என ஓபிஎஸ் உணர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேற்கு மண்டலம் எங்களது கோட்டை என எடப்பாடி கூறிவந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் 66ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் படுதோல்வி அடைந்துள்ளார். இந்த படுதோல்வி, அதிமுக பலவீனம் அடைந்துள்ளது என நினைக்க தோன்றுகிறது. எடப்பாடி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் கட்சி, செல்வாக்கை இழந்து கொண்டே வரும். அதிமுக பொதுச் செயலாளர், தேர்தல் தொடர்பாக வரும் 24ம் தேதி வரக்கூடிய நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இபிஎஸ் கையில் இரட்டை இலை இருக்கும்வரை கட்சிக்கு சரிவுதான்: டிடிவி தினகரன் பேட்டி
Share