இன்ஸ்டாகிராம் காதல்: திருமணத்திற்காக துபாயிலிருந்து வந்த மணமகன்; ஆனால் மணமகளும், மண்டபமும் இல்லாததால் அதிர்ச்சி

Share

பஞ்சாப்: இன்ஸ்டாகிராமில் காதல்

பட மூலாதாரம், UGC/SMViral

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நாளில், தான் காதலித்த மணப்பெண் காணாமல் போனதால், அவர் இணைய வழி காதலால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

திருமணத்திற்காக குறிக்கப்பட்ட நாளில், தனது காரை பூக்களால் அலங்கரித்துச் சென்ற மணமகன், பின்னர் வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்ப வேண்டியிருந்தது.

டிசம்பர் 6-ஆம் தேதி, மணமகன், தனது திருமணத்திற்காக நேர்த்தியாக அலங்காரம் செய்து கொண்டு, பஞ்சாபில் உள்ள மோகா நகரத்திற்கு வந்தார்.

ஆனால், மணப்பெண்ணையோ அல்லது திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்ட மண்டபத்தையோ அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com