இன்றைய டாப் 10 செய்திகள், பிப்ரவரி 07… – News18 Tamil

Share

இன்றைய டாப் 10 செய்திகள், பிப்ரவரி 07…

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில், 135 படகுகளை இலங்கை அரசாங்கம் ஏலத்தில் விற்பனை செய்துள்ளது.


திமுக அரசு கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வழங்குவது சட்டவிதி மீறலாக இருக்காது என கட்டாய கல்வி உரிமைச் சட்ட வரைவுக் குழுக்களில் இடம் பெற்ற கல்வியாளர் அனில் சட்கோபால் தெரிவித்துள்ளார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பையேற்று அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சி, இதற்கான பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நிமித்துள்ளது. 


சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, தனது கணவரான ஆர்.கே.செல்வமணி உடன் சந்தித்தார். 


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையில் வேலைவாய்ப்பின்மை, எல்லை பிரச்னை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை என்றும், குடியரசு தலைவருக்கே அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஆனந்த் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.


கல்லூரி வளாகத்திற்குள் ஹிஜாப் மற்றும் காவி துண்டு இரண்டுமே அனுமதிக்கப்படமாட்டாது என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில், தமிழகத்தைச் சேர்ந்த 200 பக்தர்கள் வரை அனுமதிப்பது குறித்து, ஆலோசனை நடைபெறுவதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com