இன்று உலக இட்லி தினம்… சாஃப்டான இட்லி செய்ய சில டிப்ஸ்…

Share

சர்வதேச இட்லி தினமான இன்று, பலரும் இட்லி குறித்தான தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இட்லி தினத்தை கொண்டாடி வருகின்றனர். 

ரவா இட்லி, பொடி இட்லி, நெய் பொடி இட்லி, தட்டு இட்லி, தவா இட்லி, சாம்பார் இட்லி, மதுரை இட்லி, குஷ்பூ இட்லி, மல்லிபூ இட்லி என இட்லியைத் தான் இந்த உலகம் எப்படிக் கொண்டாடித் திளைக்கிறது? மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினமாகக் கொண்டாடப்படுவதை இந்தியர்கள் ட்விட்டரில் புகழ்ந்து வருகின்றனர்.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பான்மையான கால நேரங்களை இட்லிகள் தான் அலங்கரித்து வருகின்றன. காலை உணவுகளின் ராஜாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இட்லியின் பெருமைக்குக் கூடுதல் கவுரவம் சேர்க்கும் வகையில் இந்நாள் இட்லி தினமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த இட்லி ஹோட்டல் நிறுவனரான இனியவன் என்பவரது முயற்சியால் உலக இட்லி தினம் கடந்த 30 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Also see… சர்க்கரையின் அளவை குறைக்க கருப்பட்டி இட்லி சாப்பிடுங்க…

சாஃப்டான இட்லி செய்ய சில டிப்ஸ்

1. முதலில் மூன்றறை ஆழாக்கு இட்லி அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு உளுந்து ஒரு ஆழாக்கு இருந்தால் போதுமானது. அதாவது ஒரு பங்கு உளுந்துக்கு, மூன்றரை பங்கு இட்லி அரிசி எடுத்து இரண்டையும் சுத்தமான தண்ணீர் ஊற்றி தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

2. ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி தான் மாவு அரைத்து முடிக்க வேண்டும். உளுந்து அரைக்க குறைந்த பட்சம் 30 நிமிடம் வரை செலவிடுங்கள். உளுந்து எந்த அளவிற்கு நைசாக அரைக்கிறதோ, அந்த அளவிற்கு இட்லி சாஃப்டாக வரும். 30 நிமிடம் இடையிடையே தண்ணீர் விட்டு நன்கு பொங்க பொங்க ஆட்டி எடுக்க வேண்டும்.

Also see… நீங்கள் தயிர் விரும்பியா? அப்போ இந்த இட்லியை மிஸ் பண்ணிடாதீங்க…

3. பிறகு அதை எடுத்து விட்டு அரிசியை போட்டு 15 நிமிடம் வரை அரைத்தால் போதுமானது. அரிசி கொரகொரவென்று இருக்க வேண்டும். மிகவும் நைசாக அரைத்து விட்டால் இட்லி அவ்வளவு நன்றாக வராது. அரிசிக்கு முதலிலேயே தண்ணீரை ஓரளவிற்கு தாராளமாக ஊற்றலாம். ஆனால் உளுந்திற்கு முதலில் தண்ணீரை அதிகமாக ஊற்றி விடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. அரிசி அரைக்கும் பொழுதே கல் உப்பு சேர்த்து அரைத்து விட வேண்டும். இட்லி நன்றாக வர கல் உப்பு தான் சேர்க்க வேண்டும்.

5. பின் இரண்டையும் ஒன்றாக கலந்து எட்டு மணி நேரம் அப்படியே புளிக்க விடுங்கள். அதன் பிறகு நீங்கள் இட்லி ஊற்றும் பொழுது நன்றாக கலந்து விட்டு அப்படியே வைத்துவிட வேண்டும். அதன் பிறகு எப்போதும் நீங்கள் மாவை கிளறக் கூடாது. பிரிட்ஜில் இருந்து எடுத்து அரை மணி நேரம் கழித்து இட்லி ஊற்றினால் நல்லது. உடனே ஊற்றினால் அவ்வளவாக சாஃப்ட் இருக்காது. உங்களுக்கு தேவையான மாவை மட்டும் பிரிட்ஜில் இருந்து எடுத்து உபயோகப்படுத்துங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com