`இனி வெள்ளைநிற ஷார்ட்ஸ் இல்லை' – மாதவிடாய் கசிவால் கவலைப்பட்ட கால்பந்து வீராங்கனைகள் வரவேற்பு!

Share

விளையாடுபவர்களின் உடை என்பது கச்சிதமாகவும், விளையாடும்போது அசௌகர்யத்தை ஏற்படுத்தாதவகையிலும் இருக்க வேண்டும்.

விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்கள் என்றால், உடையில் கூடுதல் கவனம் வேண்டும். மாதவிடாய் குறித்த சிக்கல்களையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. 

கால்பந்து

இந்நிலையில், முதன்முறையாக நியூஸிலாந்தின் மகளிர் தேசிய கால்பந்து அணியில் வெள்ளை நிற ஷார்ட்ஸ் உள்ள சீருடை இருக்காது என அந்நாட்டின் கால்பந்து சங்கம் திங்கட்கிழமையன்று அறிவித்துள்ளது.

இது குறித்து கூறுகையில், `வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிந்திருக்கும்போது மாதவிடாய் கசிவுகள் குறித்து, சில வீராங்கனைகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சமீப ஆண்டுகளில் வீராங்கனைகளுக்கான சீருடைகள் குறித்து மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்தக் கோடையில் ஆஸ்திரேலியாவுடன் நியூஸிலாந்து நடத்தும் உலகக் கோப்பைக்குப் பெண்கள் தேசிய கால்பந்து அணிகள் தயாராகி வருகின்றனர். அதனால் இந்தச் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

நைக் நிறுவனத்தோடு பார்ட்னர்களாக இருக்கும் பெரும்பாலான நாடுகளுக்கு புதிய சீருடைகளில் வெள்ளை நிற ஷார்ட்ஸ் இல்லை. நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 13 மகளிர் தேசிய அணிகளுக்கு திங்களன்று புதிய சீருடைகளை வெளியிட்டது, நைக் (Nike).

நியூஸிலாந்தின் மகளிர் தேசிய கால்பந்து அணிக்கு முதன்மை சீருடையாக வெள்ளை சட்டையுடன் டீல் ஷார்ட்ஸும் (Teal Shorts), இரண்டாம் நிலை சீருடையாக சில்வர் ஃபெர்ன் (Silver Fern) வடிவத்துடன் கூடிய கறுப்பு நிற கிட்டும் வழங்கப்படும்’ என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து நியூஸிலாந்து கால்பந்து வீராங்கனை ஹன்னா வில்கின்சன் கூறுகையில், `எந்தவிதமான மாதவிடாய் கவலை உள்ள பெண்களுக்கும் இது அற்புதமானது. இறுதியில் இது விளையாட்டில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது; அதோடு பெண்களுக்கான அங்கீகாரத்தையும் ஆரோக்கியத்திற்கான அக்கறையையும் காட்டுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.  

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com