“இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை” – உலக செஸ் சாம்பியன் குகேஷ்  | Nothing is over with this victory – World Chess Champion Gukesh

Share

சென்னை: “செஸ் மிகவும் அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும். இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என்று உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் கூறியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று (டிச.16) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா குகேஷுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள், குகேஷ் படித்த தனியார் பள்ளியின் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் குகேஷ் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது எனது கனவு. இளம் வயதில் சாம்பியன் ஆனதில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. அந்த போட்டி முழுவதும் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தன. 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் சில பின்னடைவுகள் இருக்கும் என்பதும் தெரியும். அதை நான் எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தேன்.

இருப்பினும் பயம் இல்லாமலும் இல்லை. வெற்றி பெற்ற தருணம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. சிறு வயதிலிருந்தே செஸ் விளையாட்டை மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் அணுகுகிறேன். செஸ் மிகவும் அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும். இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.” என்று அவர் கூறினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com