இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிடி கொழுக்கட்டை ஈஸியாக செய்ய சிம்பிள் ரெசிபி..!

Share

விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் வாங்கி , அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்ணக்குடையுடன் பல வகையான பூக்களால் பூஜை செய்து பல விதமான பலகாரங்களை செய்து விநாயகரை வழிபடுவதுதான் இந்நாளின் சிறப்பு.  இந்த விநாயகர் சதுர்த்தியின் தனித்துவமான விஷயமே பலகாரங்கள்தான்.  அதில்  விநாயகருக்கு பிரதானமாக படைக்கப்படுவது கொழுக்கட்டைதான். 

கொழுக்கட்டையில் பல வெரைட்டீஸ் உள்ளது அதில் முக்கியமான ஒன்று தேங்காய் வெல்லத்தாலான பூரணம் கொண்ட தேங்காய் பூரண இனிப்பு கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டையை எளிதில் செய்து விடலாம் என்றாலும் கூட இதை விட சீக்கிரமாக இனிப்பு கொழுக்கட்டை செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்றதுதான் பிடி கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டையை செய்ய பெரிதும் மெனக்கெட தேவையே இல்லை.எளிதான இந்த கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு – 1/2 கப்
  • வெல்லம் – 1/4 கப்
  • தண்ணீர் – 1 1/4 கப்
  • துருவிய தேங்காய் – 1/4 கப்
  • ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
  • எண்ணெய் – சிறிது

செய்முறை:

முதலில் வெல்லத்தை தட்டி நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கரைய வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டி, ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் ஏலக்காய்ப் பொடி, தேங்காய் தூவி மீண்டும் கொதிக்க விடவும்.

பின்பு தீயைக் குறைத்து, அதில் அரிசி மாவை மெதுவாக தூவிக் கொண்டே, கட்டிகள் சேராதவாறு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

ஒரு கட்டத்தில் மாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வேளையில் அடுப்பை அணைத்து, குளிர வைக்க வேண்டும்.

மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு, அந்த மாவை எடுத்து, கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லித் தட்டில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பிடி கொழுக்கட்டை ரெடி.

First published:

Tags: Pidi Kolukattai Recipe in Tamil, Vinayagar Chathurthi

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com