`இந்த நிற காளான்களை சாப்பிடாதீர்கள்’ விஷக் காளான் சாப்பிட்ட 3 பேர் இறப்பு; சிகிச்சையில் 13 பேர்! | Three members in one family died after eating ‘poisonous’ mushroom

Share

இது குறித்து மெரபானி சமூக சுகாதார துணை கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரா ஷியாம் கூறுகையில், `விஷக் காளானைச் சாப்பிட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 13 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நோய் வாய்ப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.  

மரணம்

மரணம்
சித்தரிப்புப் படம்

“புரதச் சத்து அதிகமாக கொண்ட காளான், உடம்புக்கு நல்லது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அனைத்து வகையான காளானும் நல்ல காளான்கள் கிடையாது. வெள்ளை நிறத்தில், துர்நாற்றம் இல்லாமலும், அழுகாமலும் இருந்தால்தான் அது உணவுக்கு ஏற்ற காளான்.

மற்றபடி சிவப்பு, மஞ்சள், அடர் பழுப்பு, சாம்பல், ஆரஞ்சு என விதவிதமான நிறத்தில் இருக்கும் காளான்களுக்குள் உயிரை பறிக்கக்கூடிய ஆபத்து மறைந்திருக்கிறது. அதேபோன்று காளான் சாப்பிட்ட பிறகு தலைவலி, வாந்தி, சோர்வு, உடலியக்கம் சரிவர இயங்காமல் இருப்பது என்று அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்” என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com