இந்த சிறுதானிய உணவை பற்றி கேள்விபட்டிருக்கீங்களா..? நன்மைகள் தெரிஞ்சா மிஸ் பண்ண மாட்டீங்க..!

Share

பன்முகத்தன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழும் நம் நாட்டில், விளைவிக்கப்படும் பயிர்கள் முதல் உணவுகள் வரை என எல்லாவற்றிலும் பல வகைகள், வேறுபாடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இந்தியப் பொருளாதாரம் இயங்கி வருவதால், எண்ணற்ற பயிர்கள் இங்கு விளைகின்றன. 2023-ம் ஆண்டை தானியங்களுக்கான ஆண்டாக ஐநா அறிவித்துள்ள நிலையில், எப்போதையும் விட இந்த வருடம் தானியங்கள் முதன்மை பெறுகின்றன.

சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் கூட தானியங்களில் செய்யப்பட்ட பல வகையான உணவுகள் உலக தலைவர்களுக்கு பரிமாறப்பட்டன. கேழ்வரகு, சோளம், தினை என பல வகையான தானியங்கள் இந்தியாவில் கிடைத்தாலும் டெஃப் போன்ற சில தானியங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஊட்டச்சத்து மிகுந்த டெஃப் தானியம் எத்தியோப்பா நாட்டைச் சேர்ந்தது. இதில் நம் உடல்நலத்திற்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கின்றன. மிகவும் சிறியதாக இருக்கும் டெஃப் தானியத்தை பல்வேறு வகைகளிலும் சமைத்து சாப்பிடலாம்.

எத்தியோப்பாவின் டெஃப் தனியத்தில் கிடைக்கும் 6 நன்மைகள் :

  • க்ளூட்டன் இல்லாதது: க்ளூட்டன் ஒவ்வாமை காரணமாக சிலருக்கு செரிமானத்தில் பிரச்சனை உண்டாகலாம். அவர்களைப் போன்றவர்களுக்கு இந்த டெஃப் தானியம் மிகச்சிறந்த நிவாரணமாக இருக்கும். ஏனென்றால் இதில் எந்தவித க்ளூட்டனும் கிடையாது.
  • நார்ச்சத்து: நமது குடல் நலத்திற்கும், உடல் எடை குறைப்பிற்கும் நார்ச்சத்து மிகவும் உதவியாக இருக்கும். டெஃப் தானியத்தில் இது நிறையவே உள்ளது.
  • புரதம்: நமது உடல் வலுவாக இருப்பதற்கு புரதச்சத்து மிகவும் அவசியம். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உங்களுக்கு நிறைய புரதம் தேவைப்படும். டெஃப் தானியத்தில் அதிகளவு புரதச்சத்து இருப்பதோடு உங்கள் உடலை நீண்ட நேரத்திற்கு சக்தி குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
  • எலும்பை பலப்படுத்தும்: நம்முடைய எலும்பை பலப்படுத்தும் சிறந்த உணவாக டெஃப் தானியம் பார்க்கப்படுகிறது. எலும்புகள் உருவாவதற்கு உதவும் லைசின் என்ற அமினோ ஆசிட் இந்த டெஃப் தானியத்தில் நிறைய உள்ளது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்: நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக் கூடிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் இதில் அதிகளவு இருக்கின்றன. நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆண்டிபாடிகளை உருவாக்க டெஃப் தானியம் உதவுகிறது.
  • நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது: சிக்கலான கார்போஹைடரேட் நிறைந்த இது, செரிமானம் ஆவதற்கு கொஞ்சம் கூடுதல் நேரம் அகும். ஆகையால் உங்கள் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை இது சீராக்கும்.
  • Also Read | சிறு தானிய உணவுகளை எப்படி சமைப்பது என தெரியலையா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்..! 

    இந்த டெஃப் தானியத்தை மாவாக அரைத்து சாக்லேட் கேக் செய்யலாம். தற்போது இந்த டெஃப் தானியம் இந்தியா, பல்கேரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் பயிரிடப்படுகின்றன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com