இந்து ராஷ்டிரா: இந்துக்களை வலிமையானவர்களாக உணரவைக்கும் பெருமிதமா?

Share

  • சரோஜ் சிங்
  • பிபிசி செய்தியாளர்

இந்து ராஷ்டிரா

இந்தியா மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆனது. அதே நேரம் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறியது. ஆனால் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை இந்தியாவில் ஒரு இழிவான வார்த்தையாக கருதப்பட தொடங்கியுள்ளது. ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை இந்தியா ஒரு ‘இந்து நாடு’.

சமீப காலமாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் இதுபோன்ற பல அறிக்கைகளை தொலைக்காட்சி சேனல்களில் பார்க்கமுடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் தனிப்பட்ட உரையாடல்களில் கூட இதுபோன்ற வாக்கியங்களை பயன்படுத்தியதில்லை.

இந்த அறிக்கைகள் எல்லாவற்றிலுமே முஸ்லிம்கள் அவர்களுடைய உணவு, வாழ்க்கை முறை மற்றும் மத நிகழ்வுகளுக்காக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய அறிக்கைகளின் நீண்ட பட்டியல் உள்ளது. இதுபோன்ற அறிக்கைகள் தேர்தல் நேரத்தை ஒட்டி அதிகமாக வெளியிடப்படுகின்றன. ஆனால் அவற்றின் ஆரவாரம் ஒருபோதும் முழுவதுமாக நிற்பதில்லை. இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவு நிலவுகிறது. இரு சமூகத்தினரிடையே அவ்வப்போது கலவர வடிவில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. 2020 இல் நடந்த டெல்லி கலவரத்தைத் தவிர கடந்த சில ஆண்டுகளில் கான்பூர்-மும்பை (1992), மீரட் (1987), ராஞ்சி (1967), பாகல்பூர் (1989), ஆமதாபாத் (2002) தவிர வேறு பயங்கரமான கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதும் உண்மை.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com