இந்திய பட்ஜெட் 2026: தமிழ்நாடு மற்றும் சென்னைக்கான அறிவிப்புகள் என்ன? முழு விவரம்

Share

மத்திய பட்ஜெட், நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், SANSAD TV

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் சரியாக இன்று (பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை ) காலை 11 மணிக்கு அவர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்பதை ஒரு முக்கிய கொள்கையாக வைத்து, உள்நாட்டு உற்பத்தி திறன், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் முக்கியமான இறக்குமதி சார்புகளைக் குறைத்துள்ளோம். அதே நேரத்தில், அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலிருந்தும் குடிமக்கள் பயனடைவதை உறுதிசெய்துள்ளோம், வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாய உற்பத்தித்திறன், வீடுகள் வாங்கும் திறன் மற்றும் மக்களுக்கு உலகளாவிய சேவைகளை ஆதரிப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கைகள் சுமார் 7% வளர்ச்சி விகிதத்தை வழங்கியுள்ளன. வறுமைக் குறைப்பு மற்றும் நமது மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவியுள்ளன.” என்று கூறியுள்ளார்.

அரிதான புவி நிரந்தர காந்தங்களுக்கான (Rare Earth Permanent Magnets – REPM) திட்டம் 2025 நவம்பரில் தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், “அதன் தொடர்ச்சியாக, தாதுக்கள் நிறைந்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சுரங்கம், பிரித்தெடுப்பது, ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ‘அரிய வகை தாதுக்களுக்கான வழித்தடங்களை’ (Dedicated Rare Earth Corridors) அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சுற்றுலா மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புலிகாட் ஏரியில் பறவைகளை கண்காணிக்கும் பாதைகள் உருவாக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை கூட்டவும், ‘தேங்காய் ஊக்குவிப்புத் திட்டம்’ முன்மொழியப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com