இந்திய ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! |Indian men’s sperm count has decreased” – study

Share

சுமார் 53 நாடுகளில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு குறித்த விவரங்கள், Human Reproduction Update நாளிதழில் வெளியிடப்பட்டது. அதாவது, முன்னர் ஆய்வு செய்யப்படாத பிராந்தியங்களான தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்காவில் வாழும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறித்து ஏழு வருட (2011-2918) கூடுதல் தரவை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்தது. 

ஆய்வு தகவலின்படி… 

* முதன்முறையாக வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில், முன்னர் காணப்பட்ட மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை (Total sperm count) மற்றும் விந்தணு செறிவை (Sperm Concentration) விட, தற்போது ஒரு குறிப்பிட்ட அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.

* 2000-ம் ஆண்டின் பிந்தைய காலகட்டத்தில் இருந்து விந்தணு எண்ணிக்கையில் ஒரு விரைவான சரிவைக் காட்டுகிறது.

* இந்திய ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மிகப்பெரிய வலுவான சரிவை அடைந்துள்ளது. 

விந்தணு

விந்தணு
மாதிரிப்படம்

இது குறித்து இஸ்ரேல் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹக்காய் லெவின் கூறுகையில், “ஒட்டுமொத்தமாக உலகளவில் கடந்த 46 ஆண்டுகளில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமான விந்தணு சரிவை நாங்கள் கண்டோம். இன்னும் இந்த சரிவு சமீப ஆண்டுகளில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய ஆய்வில், விந்தணு எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் ஆராயப்படவில்லை. இருந்தபோதும் விந்தணு எண்ணிக்கை குறைவது இனப்பெருக்க மண்டலத்தின் குறைபாடுகள், கருவுறுதலில் உள்ள குறைபாடுகளோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

இதிலிருந்து மீள மனிதனுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com