இந்திய அணிக்கு எதிராக அமெரிக்க அணியில் களமிறங்கும் இந்திய வம்சாவளி வீரர்கள்

Share

இந்தியா, அமெரிக்கா, டி20 உலக கோப்பை, இந்திய வம்சாவளி வீரர்கள்

பட மூலாதாரம், ICC/Getty Images

படக்குறிப்பு, சுபம் ரஞ்சனே, சௌரப் நேத்ரவால்கர் மற்றும் ஹர்மீத் சிங்

மும்பையில் பிறந்த ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒரு நாள் வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும்.

இதற்கு சுபம் ரஞ்சனே, சௌரப் நேத்ரவால்கர் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் மட்டும் விதிவிலக்கல்ல. இவர்கள் மூவரும் தற்போது தங்கள் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்தியாவுக்காக அல்ல, மாறாக அமெரிக்கா அணிக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவார்கள்.

பிப்ரவரி 7-ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டி இந்த மூவருக்கும், அவர்களது குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது.

தான் ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்ததைப் போல் உணர்வதாகக் கூறுகிறார் சௌரப் நேத்ரவால்கர், “நான் இங்கே கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டேன், மும்பையில் வளர்ந்தேன். வான்கடேயில் விளையாட வாய்ப்பு பெறுவது எனது குழந்தைப் பருவ கனவு. பல நினைவுகள், உணர்ச்சிகள் திரும்பி வருகின்றன. எனது குடும்பம், நண்பர்களைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், நான் எனது சிறந்த ஆட்டத்தை விளையாட விரும்புகிறேன்.” என்றார்.

இந்தியா, அமெரிக்கா, டி20 உலக கோப்பை, இந்திய வம்சாவளி வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுபம் ரஞ்சனே

உண்மையில், உலகக் கோப்பை போட்டிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த தருணத்தைப் பற்றி அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com