இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டம் ரத்து | India vs Bangladesh 2nd Test Day 2 Play called off due to rain in Kanpur

Share

கான்பூர்: கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதன் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று (செப்.27) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய வங்கதேசம் 35 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளான இன்றும் (செப்.28) மழை தொடர்ந்தது. இடையில் சிறிது நேரம் மழை நின்றது. பின்னர் மீண்டும் மழை தொடர்ந்ததால், 2வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் முழுமையாக இன்றைய நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com