இந்தியா வழியாக சரக்குகளை ஏற்றுமதி செய்ய வங்கதேசத்துக்கு மறுப்பு – இந்த முடிவால் இந்தியாவுக்கு நஷ்டமா?

Share

வங்கதேசத்தின் அனைத்து சரக்குகளையும் இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற்ற இந்தியா உத்தரவிட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வங்கதேசத்தின் காசிபூரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு பெண்.

தங்கள் நாட்டு சரக்குகளை இந்தியத் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் மற்றொரு கப்பல், விமானங்களுக்கு மாற்றி வேறு நாடுகளுக்கு அனுப்ப வங்கதேசத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது ரத்து செய்துள்ள இந்தியாவின் முடிவால் வங்கதேசம் அதிர்ச்சியடைந்துள்ளது.

2020ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்ட இந்த அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்திய நிலப்பரப்பு மூலம் நேபாளம், பூட்டான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கான வங்கதேசத்தின் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்த உத்தரவாதம் இருந்தபோதிலும், இது வங்கதேசத்தின் ஏற்றுமதியைப் பாதிக்கும் என்று வங்கதேச வணிக சமூகம் கருதுகிறது.

இது வங்கதேசத்தின் ஏற்றுமதியில் உடனடியாக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று வங்கதேச சரக்கு அனுப்புநர்கள் சங்கம் (BAFA) கூறியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com