இந்தியா – ரஷ்யா உறவு குறித்து மோடி என்ன சொல்கிறார்?|PM Modi highlights India, Russia Relationship as ‘Guiding Star’

Share

இந்திய பயணம்‌‌ முடிந்து ரஷ்ய அதிபர்‌ புதின் ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார்.

இந்தியா – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐதராபாத் இல்லத்தில் நேற்று இந்திய பிரதமர்‌ மோடி பேசியதாவது,

“கடந்த எட்டு தசாப்தங்களில், உலகம் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. மனிதநேயம் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்துள்ளது.

ஆனால், எப்போதும் இந்தியா – ரஷ்யா உறவு என்பது துருவ நட்சத்திரம் போல, நிலையோடு இருந்துள்ளது.

எரிசக்தி பாதுகாப்பு என்பது இந்தியா – ரஷ்யா கூட்டாண்மையின் பலமான மற்றும் முக்கிய தூணாகும்.

ரஷ்யா – உக்ரைன் போரின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே, இந்தியா தொடர்ந்து அமைதியை வலியுறுத்தி வருகிறது” என்று கூறியிருந்தார்.

மோடி - புதின்

மோடி – புதின்

விக்ரம் மிஸ்ரி என்ன சொல்கிறார்?

இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இந்தியா – ரஷ்யா உறவு என்பது நிலையானது.

நீண்ட காலத்தில் பல பிரச்னைகள் நடந்துள்ளன. ஆனால், எதுவும் இந்தியா – ரஷ்யா உறவின் அடிப்படையை பாதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 27 மணிநேரம் நீண்ட இந்திய பயணத்தில் எரிசக்தி பாதுகாப்பு, இன்ஜினீயரிங், ஐ.டி, தொழிலாளர்கள் மாற்றம் என பல துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com