இந்தியா – பாகிஸ்தான் இரண்டில் காலிதா ஜியா யாருக்கு நெருக்கமாக இருந்தார்?

Share

காலிதா ஜியா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மன்மோகன் சிங், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, 2015 ஆம் ஆண்டு வங்கதேச பயணத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோதி அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலிதா ஜியாவையும் சந்தித்தார். (கோப்புப் படம்)

காலிதா ஜியா கடைசியாக 2012-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போதைய வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார்.

இந்திய அரசாங்கம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அவரைச் சந்தித்தனர்.

அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவரை மதிய உணவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது தவிர, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜையும் அவர் சந்தித்தார்.

ஹைதராபாத் இல்லத்தில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் அவர் நீண்ட நேரம் உரையாடினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடனான சந்திப்புடன் காலிதா ஜியாவின் பயணம் நிறைவடைந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com