“இந்தியாவுடன் பாகிஸ்தான், வங்காள தேசத்தை இணைப்பது சாத்தியம்!” – சொல்கிறார் ஹரியானா முதல்வர் | “Partition Painful; Pak, Bangladesh, India Can Unite”: Haryana Chief Minister

Share

இந்தியாவுடன் வங்க தேசத்தையும், பாகிஸ்தானையும் இணைப்பது சாத்தியம் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. ஹரியானா மாநிலம், குருகிராமில் பா.ஜ.க-வின் தேசிய சிறுபான்மை மோர்ச்சாவின் மூன்று நாள்கள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அதில் ஹரியானாவின் பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “1991-ல் மக்கள் பெர்லின் சுவரை உடைத்து கிழக்கு ஜெர்மனி – மேற்கு ஜெர்மனியை இணைத்தது சாத்தியமானது. அதே போல, பாகிஸ்தான், வங்காள தேசத்தை இந்தியாவுடன் இணைப்பதும் சாத்தியமாகும். 1947-ம் ஆண்டு நாட்டில் நடந்த பிரிவினை வேதனைக்குரியது.

பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார்

பா.ஜ.க முதல்வர் மனோகர் லால் கட்டார்
ட்விட்டர்

மேலும், அந்தப் பிரிவினை மத அடிப்படையில் செய்யப்பட்டது. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பயத்தையும், பாதுகாப்பின்மை உணர்வைவும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களுக்கு `சிறுபான்மையினர்’ என்ற குறிச்சொல் வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்-ன் பயத்தைக் காட்டி சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற உணர்வை பெரும் பழைய கட்சியான காங்கிரஸ் உருவாக்கியிருக்கிறது. ஆனால் மக்கள் இப்போது காங்கிரஸின் சித்தாந்தத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றனர். சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் சிறுபான்மையினரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தியது” எனக் கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com