உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான நம் இந்தியா, எண்ணற்ற மொழிகள், கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது. நம் நாட்டில் மாநிலங்கள் வாரியாகவும், சர்வதேச எல்லைகளை கடந்தும் புகழ்பெற்றுள்ள பல உணவு வகைகளுக்கும் பல்லாயிரம் வருட வரலாறு உண்டு.
இந்த சூழலில் இந்திய தெரு உணவுகளும் (street foods) உலகளவில் மிக பிரபலமானவை. நம்நாட்டிற்கு வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் 5 ஸ்டார் ஹோட்டல்களில் ருசித்து சாப்பிடுவதை விட, நம் நாட்டின் ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்களை விரும்பி, ரசித்து சாப்பிடும் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் நாம் பார்த்திருப்போம்.
ஆனால் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் ட்ராவலுக்கான வழிகாட்டியான TasteAtlas, “மோசமாக மதிப்பிடப்பட்ட இந்திய தெரு உணவுகள்”என்ற பட்டியலை தொகுத்துள்ளது. இந்த பட்டியலில் 10 உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. Top 10 Worst Indian Street Foods பட்டியல் கடந்த ஆகஸ்ட் 17 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியல் மொத்தம் 2,508 ரேட்டிங்ஸ்களை உள்ளடக்கியது. ஆனால் TasteAtlas-ஆனது இவற்றில் 1,773 ரேட்டிங்ஸ்கள் மட்டுமே நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றும் பரிசீலிக்கலாம் என கருதுகிறது. தவிர இந்த பட்டியல் தங்களின் audience அடிப்படையிலானது என்பதையும் TasteAtlas தெளிவாக கூறி இருக்கிறது.
வியக்கத்தக்க வகையில் மோசமான இந்திய தெரு உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது மகாராஷ்டிராவில் பிரபலமாக இருக்கும் தஹி பூரி (Dahi Puri). சேவ், மாதுளை மற்றும் தயிர் சேர்த்து பரிமாறப்படும் தஹி பூரி பலருக்கும் விருப்பமான தெரு உணவாக இருந்தாலும், இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சேவ் (Sev) என்ற ஸ்னாக்ஸ், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் சாட், பப்டி, சோலே சமோசா மற்றும் மசாலா-பூரி ஆகியவை சேவ் இல்லாமல் முழுமையடையாது. காரமாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும் சேவ் ஆயிலில் நன்கு பொரித்து எடுக்கப்படும் முன் ஓமம் மற்றும் மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்கள் இதோடு கலக்கப்படுகிறது.
மோசமான இந்திய தெரு உணவுகளின் பட்டியலில் குஜராத்தின் டபேலி (Dabeli) மூன்றாவதாக உள்ளது. கொத்தமல்லி, மஞ்சள், ஏலக்காய், பெருஞ்சீரக விதைகள், மிளகு மற்றும் பிற மசாலாப் பொருட்களின் நறுமண மசாலா கலவையுடன் பிசைந்த உருளைக்கிழங்கு ஃபில் செய்யப்பட்டு வறுக்கப்பட்ட பாவ் பன்களை உள்ளடக்கிய தெரு உணவாக டபேலி இருக்கிறது. சுவைக்காக இதனுள் வறுத்த வேர்க்கடலை, மாதுளை விதைகளும் தூவப்படும். ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு கொண்டிருப்பதாக பாராட்டப்பட்டாலும் இந்த பட்டியலில் 4-ஆவதாக சேர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது பாம்பே சாண்ட்விச்.
இதனைத் தொடர்ந்து ஐந்தாம் இடத்தில் எக் புர்ஜியும் (Egg Bhurji), ஆறாம் இடத்தில் தஹி வடா (Dahi Vada)-வும் உள்ளன. ஏழாவது இடத்தில் வடஇந்தியாவில் நவராத்திரி ஸ்பெஷல் உணவாக இருக்கும் ஸ்ட்ரீட் ஃபுட்டான சபுதானா வடா (Sabudana Vada) உள்ளது. அடுத்ததாக இந்த பட்டியலில் வட இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் தெரு உணவுகளில் ஒன்றான பாப்ரி சாட்-டும் (Papri Chaat) இடம் பெற்றுள்ளது. வடஇந்தியாவை தவிர Papri Chaat-ஆனது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் பிரபலமான ஸ்ட்ரீட் ஸ்னாக்ஸாக உள்ளது.
வட இந்தியாவில் ஒவ்வொரு காலையிலும் பலரின் காலை உணவாக Paratha-க்கள் இருக்கின்றன. ஆலு பராத்தா, முட்டைகோஸ் பராத்தா மற்றும் பனீர் பராத்தா என பல ருசியான உணவுகள் இருந்தாலும் கோபி பராத்தா (Gobi Paratha) இந்த பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் போண்டா ஆகும். எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்கப்பட்டு சில வகை சட்னிகளுடன் பரிமாறப்படும் உருளைகிழங்கு போண்டா இந்த பட்டியலில் 10-ஆவது இடத்தில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.