
ஸ்ட்ரீட் ஃபுட்ஸுக்கு (Street foods) இந்திய மக்களிடையே தனி வரவேற்பு இருக்கும். இந்த உணவு இந்தத் தெருவில் இந்தக் கடையில்தான் நன்றாக இருக்கும் எனத் தேடிச் சென்று தொடர்ந்து உண்ணும் வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர்.

அதே சமயம் தெருவில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்கும் மக்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் 2,508 மதிப்பீடுகள் பெறப்பட்டு ஆய்வு செய்ததில், `இந்தியாவின் 10 மோசமான சாலையோர உணவுகள்’ குறித்த விவரங்களை Taste Atlas வெளியிட்டுள்ளது.

இந்த மோசமான சாலையோர உணவுகளின் பட்டியலில் இடம் பிடித்த உணவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
இந்த பட்டியலில் 10- வது இடத்தைப் பிடித்திருப்பது போண்டா. வட இந்திய உணவான Gobi Paratha ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

Papri chaat எட்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் பிரபலமாக அறியப்படும் சாபுதானா வடை (Sabudana Vada) ஏழாவது இடத்தில் உள்ளது.

தயிர் வடை ஆறாவது இடத்தையும், முட்டை புர்ஜி (Egg Bhurji) ஐந்தாவது இடத்தையும், பாம்பே சாண்ட்விச் நான்காவது இடத்தையும், குஜராத்தின் டபேலி (Dabeli) மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

மோசமான சாலையோர உணவுகளில் இரண்டாவது இடத்தை சேவும் (Sev), முதலிடத்தை தஹி பூரியும் (Dahi Puri) பிடித்துள்ளன.