“இந்தியாதான் பிரச்னை பண்றாங்க; நாங்க எப்பவும் ரெடி!” – முன்னாள் பாகிஸ்தான் வீரர் காட்டம்!|Javed Miandad talks about indian cricket team

Share

வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஆசியக்கோப்பை போட்டிகள் தொடங்குகிறது

இந்தப் போட்டிகள் முழுவதுமாக பாகிஸ்தானில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் விளையாட மாட்டோம் என இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டது. ஆசியக் கோப்பை நடைபெறுமா? இல்லையா? என்று இழுபறி நீடித்து வந்த நிலையில் பாகிஸ்தானில் 4 போட்டிகளையும் , இலங்கையில் 9 போட்டிகளையும் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது.

ரோஹித் மற்றும் பாபர் அசாம்

ரோஹித் மற்றும் பாபர் அசாம்

இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திர வீரர் ஜாவித் மியான்தத் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “ பாகிஸ்தான் அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து விளையாடியது. அதனால் இம்முறை இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாடுவதுதான் சரியானதாக இருந்திருக்கும்.

நாம் எப்போதும் இந்தியாவுடன் எங்கும் விளையாடத் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் மிகப்பெரியது. பல தரமான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியே வருகிறோம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com