மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்திருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலிய அணியுடனான 3 வது டெஸ்ட் நாளை (மார்ச் 1ம் தேதி) இந்தூரில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மனதளவில் பலவீனமானவர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “ இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தெளிவில்லாமல் இருக்கின்றனர். இதற்கு முன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியை தற்போது உள்ள அணியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது தான் பலவீனமான அணியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.