நம் நாட்டில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு பல உணவுகளில் பயன்படுத்தப்படும் முக்கிய காய்கறியாக தக்காளி இருந்து வருகிறது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தக்காளி சூப்பர்ஃபுட் என்று நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது.
தக்காளியின் பூர்விகம் மெக்சிகோ என கூறப்படுகிறது.உங்கள் உணவில் அடிக்கடி தக்காளி சேர்த்து கொள்வது கண் ஆரோக்கியம், செரிமான ஆரோக்கியம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்தல் உள்ளிட்ட பல நன்மைகளை தருகிறது. முக்கியமாக தக்காளியில் நிறைந்திருக்கும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் சில வகை கேன்சரை தடுக்கவும் உதவுகிறது.
தவிர லைகோபீன், பீட்டா கரோட்டின், ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் சி, ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்டவற்றின் வளமான மூலமாகவும் தக்காளி இருக்கிறது.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தக்காளி…
தக்காளியில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குறிக்க தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்ற கரோட்டினாய்டு, அவற்றுக்கு நல்ல சிவப்பு நிறத்தை அளிப்பதோடு, சூரியனின் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன.
தவிர lycopene செல்கள் சேதமடைவதை தடுக்கவும் உதவும். பிற மினரல்ஸ்களுடன் தக்காளியில் பொட்டாசியம், வைட்டமின்கள் பி மற்றும் ஈ உள்ளிட்டவையும் இருக்கின்றன. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் இதழில் தினசரி அடிப்படையில் மிதமான அளவு தக்காளியை சாப்பிடுவது LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். LDL கொலஸ்ட்ரால் arteries-களில் பிளாக்ஸ் ஏற்படுத்துகிறது. மேலும் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு போன்ற இதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. மொத்தத்தில் தக்காளியில் காணப்படும் லைகோபீன் ரத்த அழுத்தம் மற்றும் LDL கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதன மூலம் இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
Also Read | Heart Disease : இதய நோய் ஏன் வருகிறது..? தடுப்பதற்கான வழிகள் என்ன..?
உடலுக்கு தக்காளி வழங்கும் பிற முக்கிய நன்மைகள்:
அடிக்கடி டயட்டில் தக்காளியை சேர்த்து கொள்வது நம் குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மைக்கு (diversity) பங்களித்து செரிமான ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க உதவுகிறது. மேலும் கேன்சர் மற்றும் inflammatory liver disease உள்ளிட்டவை ஏற்படும் ஆபத்துகளை தக்காளி குறைக்கிறது. ஆபத்தான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது.
தக்காளியில் காணப்படும் முக்கிய வேதிப்பொருளான லைகோபீன் என்ற கரோட்டினாய்டு கேன்சரை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை வெளியேற்றுகிறது. ப்ரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை லைகோபீன் தடுப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, தினசரி தக்காளியை சாப்பிடுவது புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சரும பாதிப்பான erythema-விலிருந்து பாதுகாக்கிறது. நீங்கள் சன்பர்ன்-ஆல் பாதிக்கப்பட்டு இருந்தால் தக்காளியை மேற்பூச்சாக பாதிக்கப்பட்ட இடத்தின் மீது தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
ஒரு மீடியம் சைஸ் தக்காளியில் வெறும் 20 கலோரிகள் மட்டுமே இருக்கிறது. குறைந்த கலோரி உணவான தக்காளியில் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது. இவை நீண்ட நேரம் பசியின்றி நிறைவாக உணர வைத்து ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.
தக்காளியில் காணப்படும் கரோட்டினாய்டுகளில் lutein மற்றும் zeaxanthin உள்ளிட்டவை அடங்கும். இவை இரண்டுமே கண் ஆரோக்கியத்தை பராமரிக்க, கண்புரை மற்றும் வயது தொடர்பான macular degeneration சிக்கலை தடுக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.