ஆஸ்திரேலிய புயலில்117 ரன்னில் சாய்ந்த இந்தியா: 11 ஓவரில் அடித்து தூக்கிய ஆஸி.
விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானது.
இதையடுத்து பேட்டிங் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பு ஏதுமின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றிக் கோட்டைத் தொட்டது.
ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 66 ரன் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இருவருமே அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: