ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுக்கு விசா பெற சீன தூதரக உதவியை நாடும் சுமித் நாகல்

Share

இதுதொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் சுமித் நாகல் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “சீ​னா​வின் செங்டு நகரில் நடை​பெறவுள்ள ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்​றுப் போட்​டி​யில் பங்​கேற்க இருந்​தேன். ஆனால், எனது விசா விண்​ணப்​பம் எவ்​வித காரண​மும் இன்றி நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்​தி​யா​விலுள்ள சீன தூதரக அதி​காரி​கள் எனக்கு உடனடி​யாக உதவ முன்​வர​வேண்​டும்” என தெரி​வித்​துள்​ளார்.

சுமித் நாகலின் கோரிக்​கைக்கு உடனடி​யாக சீன தூதரகத்​திட​மிருந்து எந்​த​வித பதி​லும் கிடைக்​க​வில்​லை. டென்​னிஸ் தரவரிசை​யில் ஆடவர் ஒற்​றையரில் சுமித் நாகல் 275-வது இடத்​தில் உள்​ளார். முதல் 100 இடங்​களுக்​குள் இல்​லாத​தால் சுமித் நாகல், கிராண்ட்​ஸ்​லாம் போன்ற போட்​டிகளில் நேரடி​யாக பங்​கேற்க முடி​யாது. வைல்ட் கார்டு அல்​லது தகு​திச் சுற்​றுகளின் வாயி​லாகவே போட்​டிக்​குள் நுழைய முடி​யும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com